Pages

Thursday, 3 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 103

The Northern Wind VAADAI is so severe with dizzying that even the red-beaked crane (image) could not search its prey in mud after receding flood in river. Even by the time, it seems that he would not return home. It seems that I could not live more.  
She grieves with her friend-maid.

This is a poem compiled by VAAYILAN DDEVAN

103. நெய்தல்

கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல்,
கவிர் இதழ் அன்ன தூவி செவ் வாய்,
இரை தேர் நாரைக்கு (நாரை - படம்) எவ்வம் ஆகத்
தூஉம் துவலைத் துயர் கூர் வாடையும்
வாரார் போல்வர், நம் காதலர்;
வாழேன் போல்வல் தோழி! யானே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது

வாயிலான் தேவன் பாடல்

முருக்கம்பூ போன்ற சிவந்த வாயை உடைய நாரையே பெருவெள்ளம் வடிந்ததால் நடுங்கிக்கொண்டு சேற்றில் இரை தேடித் துன்புறும் அளவுக்கு நீர்த் திவலைகளைத் தூவும் துன்பம் நிறைந்த வாடைக்காற்று வீசும் காலத்திலும் நம் காதலர் வரமாட்டார் போல் இருக்கிறதே! தோழி! இனி நான் வாழமாட்டேன் போல் இருக்கிறது. 

இரை தேர் நாரை


No comments:

Post a Comment