Lust feeling is as embracing the space (being nothing and senseless).
She pronounces to her friend-maid when her lover is away from her. She blames him that he is not good. If she recalls him the thought is being ablaze. She couldn’t be idle without remembrance. (Image) It is beyond her control.
This is a poem compiled by AVVAIYAR, a female poet.
102. நெய்தல்
உள்ளின், உள்ளம் வேமே;(படம்) உள்ளாது
இருப்பின், எம் அளவைத்து அன்றே; வருத்தி
வான் தோய்வு அற்றே, காமம்;
சான்றோர் அல்லர், யாம் மரீஇயோரே.
''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குக்
கிழத்தி, ''யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?'' என்றது
ஒளவையார் பாடல்
காமம் என்பது வானத்தைத் தழுவது போன்றது. (உருவம் இல்லா உணர்வு. இந்த உணர்வில் ஐம்புல நுகர்வும் இல்லை)
காதலன் இல்லாதபோது காதலிக்குக் காம உணர்வு இப்படி இருந்தது.
காதலனை நினைத்தால் உள்ளம் வேகிறது.
நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை.
என்னைத் தழுவியவர் இப்போது சான்றவர் (நல்லவர்) இல்லை.
![]() |
| உள்ளி, உள்ளம் வேகும் ஒருத்தி |

No comments:
Post a Comment