Life of love enjoyment is better than any other enjoyment in the world and beyond the world that God enjoying.
According to my view, if I weigh in a scale placing life in the material world at present and enjoyment in deities’ world after death in one side and placing love life in other side the love-life is good being heavy.
This is a poem compiled by PADUMAN whose chin is broad.
101. குறிஞ்சி
விரிதிரைப் பெருங் கடல் வளைஇய உலகமும்,
அரிது பெறு சிறப்பின் புத்தேள் நாடும்,
இரண்டும், தூக்கின், சீர் சாலாவே-
பூப் போல் உண்கண், பொன் போல் மேனி,
மாண் வரி அல்குல், குறுமகள்
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே.
தலைமகட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது
(பொருள்) வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவு அழுங்கியதூஉம் ஆம்
பரூஉ மோவாய்ப் பதுமன் பாடல்
தராசின் ஒரு தட்டில் இந்த உலகம், இறந்த பின்னர் பெறக்கூடிய தேவர் உலகம் ஆகிய ஈருலக வாழ்க்கையையும் வைத்துவிட்டு மற்றொரு தட்டில் இவளோடு வாழும் வாழ்க்கையை வைத்து நிறுத்துப் பார்த்தால் இவளோடு வாழும் வாழ்க்கையே சிறந்து நிற்பதைக் காணமுடியும்.
இவள் குறுமகள். பூப்போல் தோன்றி என்னை உண்ணும் கண், பொன்னைப்போல் பளபளக்கும் மேனி, அழகிய கோடுகளை உடைய அல்குல், ஆகியவற்றை உடையவள். இவளது தோள்களை மாறி மாறித் தழுவும் நாளே நன்னாள், என்கிறான் அவன்.

No comments:
Post a Comment