Pages

Wednesday, 2 July 2014

Kurunthogai annotation குறுந்தொகை விளக்கம் 100

She is as modesty as the deity statue (image – a lady in Ellora art) sculptured in the western cave of ‘Kolli’ hill in the region of ORI king who was famous in archery.
In his country the hill trodden people cultivate red-rice-paddy near water-falls and reap the harvest along with greens KULAVI and MARAL to cook. If they could not get food in season they sell tusks for edible grains.   

This is a poem compiled by KAPILAR

100. குறிஞ்சி

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும்
காந்தள்அம் சிலம்பில் சிறுகுடி பசித்தென,
கடுங் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந்தனளே-
மணத்தற்கு அரிய, பணைப் பெருந் தோளே.

பாங்கற்கு உரைத்தது
அல்ல குறிப்பட்டு மீள்கின்றான் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉம் ஆம்
கபிலர் பாடல்

பருத்தகன்ற தோளோடு கூடிய மார்பகம் கொண்ட அவள் அரசன் வல்வில் ஓரியின் கொல்லிமலைக் குடவரைக் குகையில் எழுதிய பாவைச்சிற்பம் போன்ற மடத்தனமான அழகினைக் கொண்டவள்.

கொல்லிமலையில் காந்தள் மிகுந்த காட்டில் உள்ள சிறுகுடி மக்கள் அருவியைச் சார்ந்திருக்கும் நிலத்தில் ஐவன நெல் விதைத்து அதனை அறுவடை செய்யும்போது குளவி, மரல் என்னும் விளைகதிர்களையும் அறுவடை செய்வர். அவர்கள் பசியால் வாடும் நிலை நேரின் யானைகளின் தந்தத்தை விற்று உண்பர். 

கொல்லிக் 
குடவரைப் பாவை 
படம் எல்லோரா 
குடவரைப் பாவை

No comments:

Post a Comment