Lust feelings flow like flood.
He returns home with earned wealth.
Friend-maid of his lover asked him whether he would remember his lover while he is away.
He replies.
I think.
I recall all the memories.
It seems him wonder.
But it is world’s habit.
His lust feelings flow like a flood in the forest (image) touching the branches of the tree ‘Maraam’.
(What shall I do? It is the answer he conveyed)
This is a poem compiled by AVVAIYAR, a female poet.
99. முல்லை
உள்ளினென் அல்லெனோ யானே? உள்ளி,
நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து,
மருண்டனென் அல்லெனோ, உலகத்துப் பண்பே?
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்து உணச் சென்று அற்றாங்கு,
அனைப் பெருங் காமம் ஈண்டு கடைக்கொளவே.
பொருள் முற்றிப் புகுந்த தலைமகன். ''எம்மை நினைத்தும் அறிதிரோ?'' என்ற தோழிக்குச் சொல்லியது
ஒளவையார் பாடல்
எண்ணினேன். பழமையை நினைத்துப் பார்த்தேன். நிகழ்ந்ததை எண்ணி வியந்தேன். உலகத்துப் பண்பு இதுதான் என்று அமைதி பெற்றேன். மரா மரத்துக் கிளைகளைத் தொட்டுக்கொண்டு பாயும் வெள்ளம் போல என் காமம் பெருக்கெடுத்து ஓடியது. (என்ன செய்வேன். கடமையில் ஈடுபட்டேன்)
![]() |
| கோடுதோய் மலிர்நிறை |

No comments:
Post a Comment