She longs for his return home.
She explains her thought to her friend-maid.
Flower of ridge guard blossoms. (Images)
It indicates the rainy season.
He did not return home as he assured.
It is better to me if somebody explain my position to him in person.
This is a poem compiled by KOKKULAMUTRAN
98. முல்லை
''இன்னள் ஆயினள் நன்னுதல்'' என்று, அவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே,
நன்றுமன் வாழி தோழி! நம் படப்பை
நீர் வார் பைம் புதற் கலித்த
மாரிப் பீரத்து அலர் சில கொண்டே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கோக்குளமுற்றன் பாடல்
மாரிக்காலத்தில் பூக்கும் பீர்க்கம்பூ பூத்துவிட்டது. இவள் இப்படி ஆகிவிட்டாள் என்று அவரிடம் நேரில் சென்று சொல்லுவார் இருப்பாராகில் நன்று.
துன்னல் = நெருங்குதல், படப்பை = தோட்டம்,
புதல் = செடிப்புதர், கலித்தல் = தழைத்தல்
பீரம் = பீர்க்கஞ்செடி

No comments:
Post a Comment