Abodes of love portions
A lover moans.
I am here.
My virginity lasts at littoral sand.
My lover is comfortable in his village
Our relation is fabled in tongue of the village people.
(What shall I do?)
This is a poem compiled by VENPOOTHI
97. நெய்தல்
யானே ஈண்டையேனே; என் நலனே
ஆனா நோயொடு கானலஃதே.
துறைவன் தம் ஊரானே;
மறை அலர் ஆகி மன்றத்தஃதே.
வரைவு நீட்டித்தவழித் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
வெண்பூதி பாடல்
நானோ இங்கு இருக்கிறேன். என் பருவ நலமோ இப்போது தாங்கமுடியாத நோயோடு அன்றே (அவன் புணர்ந்த) கடலமணல் கானல் நிலத்தோடு போய்விட்டது. (எதைப் பற்றியும் கண்டுகொள்ளாமல்) துறைவன் தன் ஊரில் இருக்கிறான். மறைந்திருக்க வேண்டிய இந்த உறவோ பூத்துக் குலுங்கி ஊர்மன்றத்தார் வாயில் இருக்கிறது. (என்ன செய்வேன்?)

No comments:
Post a Comment