- கணவனை வாழ்த்திக்கொண்டு, நல்ல மனைவி வாழும் இல்லத்தை, மேம்படுத்திக் கூறுவது இல்லாள் முல்லை எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
’கல்’ என் நீர் வேலிக் கணவன் கழல் வாழ்த்தி
ஒல்லும் வகையால் விருந்து ஓம்பிச் - செல்லும் தம்
இல்-செல்வம் அன்றி இரந்தவர்க்கு ஈகல்லாப்
புல்-செல்வம் பூவா புகழ்.
- அவளுக்கு அவள் கணவன் நிலத்துக்கு நீரால் சூழப்பட்ட வேலி போன்றவன்.
- அவள் அவனை வாழ்த்திக்கொண்டு வாழ வேண்டும்.
- தன்னால் முடிந்த அளவு விருந்தினரைப் பேணவேண்டும்
- இப்படி வாழ்வதுதான் "இற்செல்வம்"
- இரந்தவர்க்கு ஈயாத அற்பச் செல்வம் குடும்பத்துக்குப் புகழைத் தராது.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 157
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment