- பகடு என்பது வயலில் உழைக்கும் எருத்துமாடு
- உழைத்தல், சுமையைத் தாங்கல் ஆகியவற்றால் மனைக்கிழவனை (இல்லத் தலைவனை) எருதொடு பொருத்தி மனைவி கூறுவது பகட்டு முல்லை எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
உய்த்தல் பொறுத்தல் ஒழிவு இன்று ஒலி வயலுள்
எய்த்தல் அறியாது இடை இன்றி - வைத்த
படு நுகம் பூண்ட பகட்டொடு மானும்
நெடுமொழி எம் கணவர் நேர்.
- எருது நுகத்தைத் தாங்கி வண்டியை இழுத்துச் செல்லும். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வயலில் உழைக்கும்.
- எம் கணவர் குடும்பத்தை வழிநடத்திச் செல்வார். ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வயலில் உழைக்கும்.
- அதனால் எம் கணவர் வயலில் பாடுபடும் மாடு போன்றவள், என்கிறாள் மனைவி
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 158
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
![]() |
உழைக்கும் பகடும் உழவனும் |
No comments:
Post a Comment