Pages

Monday, 7 July 2025

நாண்முல்லை 10-4-4

  • கணவன் இல்லாதபோது மனைவி தனிமையில் தன் நாணம் (கற்பு) ஒன்றை வைத்துத் தன்னைக் காத்துக்கொண்டது பற்றிப் கூறுவது நாண்முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:


கொய் தார மார்பின் கொழுநன் தணந்த பின்
பெய் வளையாட்குப் பிறிது இல்லை - வெய்ய
வளி மறையும் இன்றி வழக்கு ஒழியா வாயில் 
நளி மறைக்கு நற்றுணை நாண். 

  • அவள் கொழுநன் ஒரே மட்டமாகக் கத்தரிக்கப்பட்ட மாலை அணிந்தவன். அவன் அவளை விட்டுப் பிரிந்து வாழ்கிறான். அவள் மனைக்குக் காற்றைத் தடுக்கும் சுவரும் இல்லை.. பலரும் அவள் வீட்டுக்கு, அவள் கணவன் இருக்கும்போது வந்து போனது போல, வந்துபோகிறார்கள். இந்த நிலையில் அவளுக்குத் துணை யார்? அவள் கொண்டிருக்கும் நாணம் (கற்பு) ஒன்றே.  

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment