Pages

Sunday, 6 July 2025

தேர் முல்லை 10-4-3

  • பகையரசனை வென்ற அரசனின் தேர் வருதல் பற்றிக் கூறுவது தேர் முல்லை எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

தீர்ந்து வணங்கித் திறை அளப்பத் தெம் முனையுள் 
ஊர்ந்து நம் கேள்வர் உழை வந்தார் - சார்ந்து
பரி கோட்டம் இன்றி பதவு ஆர்ந்து உகளும்
திரி கோட்ட மா இரியத் தேர். 

  • பகையரசன் திறை அளந்தான். 
  • போர் முனையிலிருந்து எம் கேள்வர் திரும்பினார்
  • தேரில் திரும்பினார் 
  • கொம்பு இல்லாத மான் (குதிரை) முறுக்கிய கொம்பு இருக்கும் மான் ஆகியவை இப்போது புல்லை மேய்ந்துகொண்டிருக்கின்றன. 

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment