- போர்ப் பாசறையிலிருந்து தலைவன் திரும்புவதற்கு முன் வந்த கார்காலம் பற்றிக் கூறுவது கார் முல்லை எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
புனையும் பொலம்படைப் பொங்கு உளைமான் திண் தேர்
துனையும் துனைப்படை துன்னார் - முனையுள்
அடல் முகந்த தானை அவர் வாரா முன்னம்
கடல் முகந்து வந்தன்று கார்.
- அழகிய அணிகள் பூட்டிய குதிரை.
- பொங்கும் உளை மயிரைப் பிடரியில் கொண்ட குதிரை.
- தேரில் இந்தக் குதிரைகள் பூட்டப்படவில்லை
- போர் முகத்தில் பகைவரை அழிப்பதிலேயே அவன் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.
- கார்காத்தில் திரும்பிவிடுவேன் என்று சொன்ன அவர் இல்லம் திரும்பவில்லை
- அதற்குள் கடலில் நீரை முகந்துகொண்டு கார்மேகம் வந்துவிட்டது.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 156
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment