- அகன்ற மார்பினை உடைய ஆண்மகன் தான் விரும்பும் பெண்ணைப் புணரும் மகிழ்ச்சியைக் கூடுவது முல்லை எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஊதை உலர ஒசிந்து மணம் கமழும்
காதை போல் முல்லைக் கொடி மருங்குல் - பேதை
குவைஇ இணைந்த குவி முலை ஆகம்
கவைஇக் கவலை இலம்.
- ஊதைக் காற்று வீசுகிறது
- அவள் மணம் கமழப் பூத்திருக்கும் முல்லைக் கொடி போன்ற இடையினை உடையவள்.
- வஞ்சகம் அறியாப் பேதை.
- குவிந்து இணைந்திருக்கும் முலையாள்
- அவளது முலை ஆக்கத்தைக் கட்டி அணைத்துக்கொண்டு அவன் கவலை இல்லாமல் இருக்கிறான்.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 156
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment