- நெய்தல் பறை முழக்கத்துடன் பிணம் இடு காட்டை வாழ்த்துதல் காடு வாழ்த்து எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
முன்புறம் தான் காணும் இவ் உலகை இவ் உலகில்
தன் புறம் கண்டு அறிவார் தாம் இல்லை - அன்பின்
அழுநார் கண் நீர் விடுத்த அறு ஆடிக் கூகை
கழுது ஆர்ந்து இர வழங்கும் காடு.
- உலகை நாம் நம் முன்புறம் காண்கிறோம்.
- நாம் இறந்த பின் நம் உடம்பு பிணத்தை வைத்துவிட்டுச் செல்லும் இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
- நம்மைப் பிரிந்தவர் அழும் கண்ணீர் ஆறு அங்கு ஓடுகிறது.
- அதில் குளித்த கூகை, பேய் ஆகியன அங்குத் திரிகின்றன.
- அங்குச் செல்லலாதவர் ஆரும் இல்லை.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 155
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment