Pages

Sunday, 6 July 2025

புலவர் ஏத்தும் புத்தேள் நாடு 10-3-4

  • புலவர் என்பவர் நுழைபுலம் படர்ந்த நோய் அறு காட்சி (நுண்ணறிவு படரும் குற்றமற்ற காட்சி) உள்ளவர். 
  • விழைபுலம் கடந்து வாழுவது வீடு. (ஆசைப்படும் அறிவு இல்லாமல் வாழ்வது வீடு) 
  • புலவர் போற்றும் வீடு பற்றிச் சொல்வது புலவர் ஏத்தும் புத்தேள் நாடு எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

பொய் இல் புலவர் புரிந்து உறையும் மேல் உலகம்
ஐயம் ஒன்று இன்றி அறிந்து உரைப்பின் - வெய்ய
பகல் இன்று இரவு இன்று பற்று இன்று துற்று இன்று
இகல் இன்று இளிவரவும் இன்று.

  • பகல் இரவு
  • பற்று துற்று (துய்த்தல் / நுகர்தல்)
  • இகல் (மற்றவரிடம் கொள்ளும் பிணக்கு) இளிவரவு (மற்றவரை ஏளனம் செய்தல்
  • இல்லாத ஒன்றுதான் மேல் உலகம். 
  • தேவர் - பொய் இல்லாத புலவர் - என்று போற்றப்படுபவர்
  • இவர்கள் வாழும் உலகம் மேல் உலகம். 
  • மேல் உலகம் - மேன்மைப் பாங்கு கொண்ட உலகம்
  • தேவர் - மேலானவர். இனியவர்

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment