- பொருண்மொழியை / பொருள்மொழியைத் திருக்குறள் "மெய்ப்பொருள்" என்று குறிப்பிடுகிறது.
- இது முனிவன் கண்ட உலகியல் உண்மை.
- இது பொருண்மொழிக் காஞ்சி எனப்படும்.
- இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:
ஆய பெருமை அவிர் சடையோர் ஆய்ந்து உணர்ந்த
பாய நெறிமேல் படர்ந்து ஒழுகித் - தீய
இருளொடு வைகாது இடம்படு ஞாலத்து
அருளொடு வைகி அகல்.
- இருக்கும் பெருமை அனைத்தும் பெற்ற அவிர் சடை முனிவர் ஆராய்ந்து உணர்ந்து சொல்லப் பரவும் நெறியில் சென்று வாழ வேண்டும்.
- தீமை விளையும் இருளில் இருக்கக் கூடாது
- அருளை விட்டு அகலாமல் வாழவேண்டும்.
பொதுவியல் - பொது இயல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 154
பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்
No comments:
Post a Comment