Pages

Saturday, 5 July 2025

பெருங் காஞ்சி 10-3-2

  • உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மையை எடுத்துரைப்பது பெருங் காஞ்சி எனப்படும். 
  • இதனைச் சொல்லும் மேற்கோள் பாடல்:

ஆயா அறிவு அயர்ந்து அல்லாந்து அகல் இடத்து 
மாயா நிதியம் மனைச் செறீஇ - ஈயாது
இறுகப் பொதியன்மின் இன்றோடு நாளைக்
குறுக வரும் அரோ கூற்று. 

  • ஆராயாமல்
  • அறிவு மயங்கி
  • பயன்படுத்தாமல் இடமெல்லாம் மல்லாந்து கிடக்கும் செல்வத்தைப் பிறருக்குத் தராமல் வீட்டில் பதுக்கி வைத்திருக்காதீர். 
  • இன்றோ நாளையோ உன் உயிரைக் கொண்டு செல்லக் கூற்றுவன் வருவான். 

பொதுவியல் - பொது  இயல்

பாடல் - சொல் பிரிப்பு
புதிய புதிய சொற்றொடர்

No comments:

Post a Comment