Pages

Tuesday, 3 June 2025

தலைத்தோற்றம்

 தனக்கு வேண்டியவன் பசுக்கூட்டத்துடன் வருவது கண்டு
அவனது சுற்றத்தார் மகிழ்ந்ததைக் கூறுவது 
"தலைத்தோற்றம்" என்னும் துறை ஆகும்.
இதற்குப் பாடல்

மொய் அணல் ஆன் நிரை முன் செல்லப் பின் செல்லும் 
மை அணல் காளை மகிழ் துடி - கை அணல்
வைத்த எயிற்றியர் வாள் கண் இடன் ஆட 
உய்த்தன்று உவகை ஒருங்கு. 

ஆன் நிரை முன்னே செல்லப் பின்னால் இருந்து மையணல் காளை ஓட்டிக்கொண்டு வருகிறான். மகிழ்ச்சியில் தன் துடிப் பறையை முழக்கிக்கொண்டு வருகிறான். இதனைக் கண்ணுற்ற அவன் சுற்றத்து எயிற்றியர் தன் கையைத் தாவாயில் வைத்துக்கொண்டு மகிழ்கின்றனர். அவர்களின் இடக்கண் துடிக்கிறது. இது அவர்களுக்கு நன்னிமித்தம். 

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment