கவர்ந்து வந்த ஆனிரைகளைத் தன் ஊர் மன்றத்துக்குக் கொண்டுவந்து நிறுத்துதல் "தந்துநிறை" என்னும் துறை ஆகும்.
இதற்குப் பாடல்:
தண்டா விருப்பினள் தன்னைத் தலைமலைந்த
வண்டு ஆர் கமழ் கண்ணி வாழ்க என்று - கண்டாள்
அணி நிரை வாள் முறுவல் அம்மா எயிற்றி
மணி நிரை மல்கிய மன்று.
அவள் அம்மா எயிற்றி / அழகிய மாமை நிறம் கொண்ட எயிற்றி.சிரிக்கும் பல்லுடன் கண்டாள்.ஊர் மன்றத்தில் மணி ஒலிக்கும் பசுக்கூட்டம் நிற்பதைக் கண்டாள்.தடுக்க முடியாத ஆசையுடன் தன்னை மணந்தவன் ஆனிரைகளைக் கவர்ந்து வந்திருக்கிறான்"அவன் குடிப் பூ வாழ்க" என்று அவள் வாழ்த்தினாள்.
No comments:
Post a Comment