கவர்ந்து வந்த ஆனிரைகளை, ஊர் மக்கள் கவர உதவிய அவரவர் தரத்துக்கு ஏற்பப் பகிர்ந்து கொடுத்தல் "பாதீடு" என்னும் புறத்துறை.
இதனை உணர்த்தும் பாடல்:
ஒள் வாள் மலைந்தார்க்கும் ஒற்று ஆய்ந்து உரைத்தார்க்கும்
புள் வாய் சொன்ன புலவர்க்கும் - விள்வாரை
மாறு அட்ட வென்றி மறவர் தம் சீறூரில்
கூறு இட்டார் கொண்ட நிரை.
கொண்டுவந்த பசுக்களைவாள்போர் செய்தவர்ஒற்று பார்த்துச் சொன்னவர்புள் சகுனம் சொன்ன புலவர்
போரிட்ட மறவர்முதலானோர்க்குப் பங்கிட்டுக் கொடுத்தனர்.
No comments:
Post a Comment