அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு
மட்டுக் கள் உண்டு மகிழ்வுடன் ஆடுதல்
"உண்டாட்டு" என்னும் புறத்துறை.
இதனைச் சொல்லும் பாடல்:
இளி கொண்ட தீஞ்சொல் இள மா எயிற்றி
களி கொண்ட நோக்கம் கவற்றத் - தெளி கொண்ட
வெங்கண் மலிய விளிவது கொல் வேற்றார் மேல்
செங்கண் மறவர் சினம்.
எயிற்றி இளமையானவள்புன்னகை பூக்க இனிமையாகப் பேசுவாள்களிப்புன் கணவனை நோக்குவாள்அவன் எதிர்த்துத் தாக்கியவரை எண்ணிச் சினத்துடன் இருக்கிறான்அவள் பார்வை அவன் சினத்தை மாற்றுவதால் மாறி விழுந்துவிடும் போலும்
No comments:
Post a Comment