Pages

Tuesday, 3 June 2025

சுரத்து உய்த்தல்

 பசுக்கூட்டம் வருந்தாமல் கானத்திலும், சுரத்திலும் ஓட்டிக்கொண்டு வருதல் "சுரத்து உய்த்தல்" என்னும் துறை ஆகும். 
கானம் என்பது முல்லை நில வழி
சுரம் என்பது பாலைநில வழி 
இதற்குப் பாடல்: 

புல் மேய்ந்து அசைஇப் புணர்ந்து உடன் செல்க என்னும்
வில் மேல் அசைஇய கை வெல் கழலான் - தன் மேல் 
கடுவரை நிரில் கடுத்து வரக் கண்டும் 
நெடு வரை நீழல் நிரை. 

புல்லை மேய்ந்துகொண்டும், நிழலில் இளைப்பாறிக்கொண்டும் ஆனிரை செல்லட்டும் என்று வில்லைக் கையில் வைத்துக்கொண்டு ஆனிரைகளைக் கவர்ந்து வரும் வெற்றிக் கழல் அணிந்த மறவன் கூறினான். அருவியில் நீர் கொடுவது போல் ஆனிரை மீட்க வரும் கரந்தை வீரர்களை அவன் பொருட்படுத்தவில்லை.    

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment