நிரை கவர மறவன் தானே சென்றது
தேறல் என்பது விளைவித்த கள். அது சாடியில் எப்போதும் இருக்கும். மறவன் அதனைப் பருகினான். மறுமுடக்கு இல்லாமல் ஒரே மூச்சாகப் பருகினான்.
அப்போதும் அவன் கடும் கண் மழைத்தடம் கண்ணாகவே / ஈரமான கண்ணாகவே இருந்தது. போருக்குச் செல்ல அடையாளப் பூவைச் சூடினான்.
போருக்குச் செல்லும்போது காலில் கழல் புனைதல் வழக்கம். அவன் கழலைப் புனைந்தான்.
நாளைக்குக் காலையில் பகைவரின் ஆனிரைகள் படை போ நம் ஊரில் இருக்கும்.
அறாஅ நிலைச் சாடி ஆடுறு தேறல்
மறாஅன் மழைத்தடம் கண்ணி - பொறாஅன்
கடுங்கண் மறவன் கழல் புனைந்தான் காலை
நெடும் படைய நேரார் நிரை
படலம் வெட்சி
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 34
பாடல் - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment