வெட்சிப்பூ சூடும் ஆரவாரம்
கலவார் முனைமேல் செல்லல்
பகைவரோடு போரிடச் செல்லல்
நெடி படு கானத்து நீள் வேல் மறவர்
அடி படுத்து ஆர் அதர் செல்வான் - துடி படுத்து
வெட்சி மலைய விரவார் மணிநிரைக்
கட்சியுள் காரி கலுழ்ம்.
சிள்வீடு ஒலிக்கும் கானம். நீண்ட வேலினை உடைய மறவர் காலில் செருப்பு அணிந்துகொண்டு துடியை முழக்கிக்கொண்டு செல்ல வெட்சி மலரைச் சூடுகின்றனர். அப்போது அவர்களின் பகைவர்களது பசுப் பட்டியில் கருங்குருவி அழும் ஓசை கேட்டது. இந்த ஒலி தீய சகுனம்.
வெட்சிப்படலம்
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 34
பாடல் - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment