செய்யப்போகும் செயலின் விளைவைத் தெரிந்துகொள்ள, பிறர் தற்செயலாகப் பேசிக்கொள்ளும் சொற்களைக் கேட்டல் விரிச்சி எனப்படும் சகுனம் ஆகும்.
ஆனிரை கவரச் செல்பவர் இத்தகைய விரிச்சி கேட்கின்றனர்
எழு அணி சீறூர் இருள் மாலை முன்றில்
குழு இனம் கை கூப்பி நிற்பத் - தொழுவில்
குடக் கள் நீ கொண்டுவா என்றாள் குனி வில்
தடக்கையாய் வென்றி தரும்.
அது சிற்றூர். மதிலில் எழு இருக்கும் சிற்றூர். மாலை நேரம். முற்றத்தில் மக்கள் குழுவாகக் கூடிக் கைகளைக் கூப்பி வணங்கிக்கொண்டு நிற்கின்றனர். சற்றுத் தொலைவில் ஒரு மாட்டுத் தொழுவம். அங்கு உள்ளவர்கள் பேசிக்கொள்கின்றனர். "குடத்தில் நீ கள் கொண்டுவா" என்று சொல்லும் பேச்சொலி காதில் விழுகிறது. இதனை நல்ல சகுனம் என்று எடுத்துக்கொள்கின்றனர்.
வெட்சிப்படலம்
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 35
பாடல் - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment