Pages

Monday, 2 June 2025

செலவு (வெட்சி-துறை)

வில் வீரர்கள் கல் நிலத்தைக் கடந்து வேற்று நிலம் செல்லல்
செலவு என்னும் துறை
[வில் ஏர் உழவர் வேற்றுப் புலம் முன்னி, 
கல் ஏர் கானம் கடந்து சென்றன்று] - கொளு

கூற்று இனத்து அன்னார் கொடு வில் இடன் ஏந்தி 
பாற்று இனம் பின் படர முன் படர்ந்து - ஏற்று இனம் 
நின்ற நிலை கருதி ஏகினார் நீள் கழைய
குன்றம் கொடு வில்லவர். 

சென்றவர் எமன் கூட்டம் போன்றவர். கொடிய வில்லை இடப்பக்கம் வைத்திருந்தனர். கொன்றவரைத் தின்னலாம் என்று பறவைகள் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தன. இவர்கள் அவற்றிற்கு முன்னே சென்றனர். மாட்டுக் கூட்டம் இருக்கும் இடத்தைத் தேடிக்கொண்டு சென்றர். மூங்கில் அடர்ந்த மலை வழியே சென்றனர்.  

வெட்சிப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment