வேவு பார்த்தல்
ஒற்றுப் பார்த்தல்
செயலே "வேய்"
நிலையும் நிரையும் நிரைப் புறத்து நின்ற
சிலையும் செரு முனையுள் வைகி - இலை புனைந்த
கள் அவிழ் கண்ணிக் கழல் வெய்யோய் சென்று அறிந்து
நள் இருள் கண் வந்தார் நமர்.
போருக்கு உரிய இலைப்பூக்களையும், போருக்காக அணியும் வீரக் கழலினையும் கொண்டவனே! நம்மவர் பகைவர் இருக்கும் இடத்துக்கே சென்று தங்கி ஆனிரைக்களின் நிலைமை, அவற்றைக் காக்கும் வில் வீரர், ஆகியவற்றறைத் தெரிந்துகொண்டு வந்துள்ளனர்.
No comments:
Post a Comment