பகைவர் ஊரின் நுழை வாயிலை அடைத்து வளைத்துக்கொண்டு அவ்வூரின் புறத்தே இறுத்தல் (படையுடன் இருக்கை கொள்ளுதல்)
உய்ந்து ஒழிவார் ஈங்கு இல்லை ஊழிக்கண் தீயே போல்
முந்து அமருள் ஏற்றார் முரண் முருங்கத் - தந்து அமரின்
ஒற்றினால் ஒற்றி உரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமல் சூழ்ந்து
ஒற்றர்களை அனுப்பி ஊரின் வல்லமையை அறிந்துகொண்டு, உலகம் அழியும் ஊழிக் காலத்தில் தோன்றும் தீ போல், போரிடுவோரை அழித்து, பகைவர் ஊரின் புறத்தே தங்கினர்.
No comments:
Post a Comment