ஊர் கொலை என்னும் சொற்றொடர் ஊர் மக்களை கொல்லுதலைக் குறிக்கும். இது புறப்பொருள் வெண்பா மாலை நூலில் சொல்லப்பட்டுள்ள போர்த் துறைகளில் ஒன்று.
இகலே துணையா எரி தவழச் சீறிப்
புகலே அரிது என்னார் புக்குப் - பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழல் ஆர்ப்பக்
கொலை விலார் கொண்டார் குறும்பு.
மாறுபாடே துணையாகக் கொண்டவர், சீறிக்கொண்டு சென்றனர். தாம் ஊரில் மூட்டிய தீயில் புகுதல் அரிது என்று பாராமல் புகுந்து போரிட்டனர். போர் பகலில் நடந்தது. வீழாத பகைவர் வீழ்ந்தனர். தம் வீரக் கழல் ஆர்ப்பப் போரிட்டு ஊரைக் கைப்பற்றினர்.
No comments:
Post a Comment