ஆனிரை கவர வேந்தன் ஏவியத்து
அவன் கண்கள் சினத்தில் எரிந்துகொண்டிருந்தன. பற்றி எரியும் காட்டுத் தீயில் மரத்தை வெட்டிப் போட்டது போல எரிந்துகொண்டிருந்தன.
அவன் கையில் வேல் வைத்திருக்கும் காளை. இலை போன்ற அந்த வேல் ஐ என்று இருந்தது. பளபளப்புடன் வியக்கும் தன்மை உடையதாக இருந்தது.
வேந்தன் அவனைக் கண்ணுற்றான். அந்தப் பசுக்களைக் காளையுடன் கொண்டுவருக என்று அவனிடம் கூறினான்.
மண்டும் எரியுள் மரம் தடிந்து இட்டு அற்றாக்
கொண்ட கொடும் சிலையன் கோல் தெரியக் - கண்டே
அடையார் முனை அலற ஐ இலை வேல் காளை
விடை ஆயம் கொள்க என்றான் வேந்து.
படலம் - வெட்சி
மேற்கோள் பாடல்
No comments:
Post a Comment