Pages

Sunday, 1 June 2025

உவமா தீவகம்

உவமை அணி, தீவக அணி இரண்டும் ஒரே பாடலில் இணைந்து வரின் உவமா தீவகம் எனப்படும். 

பாடல் - எடுத்துக்காட்டு

முன்னம் குடை போல் முடி நாயக மணி போல் 
மன்னும் திலகம் போல் வாள் இரவி - பொன் உலகம் 
தங்கு கவுத்துவம் போல் உந்தித் தடமலர் போல்
அம் கண் உலகத்தார்க்கு ஆம். 

பாடல் - செய்தி

அவன் அங்கண் உலகு அளந்த மால்
அவன் உலகை அளந்தபோது இரவி எப்படி இருந்தது
இரவி குடை போல் இருந்தது
இரவி அவன் மணிமுடியில் இருக்கும் நாயக மணி போல் இருந்தது
இரவி அவன் பொட்டு போல் இருந்தது  
இரவி அவன் மார்பில் இருக்கும் கவுத்துவ மணி போல் இருந்தது

குறிப்பு

இரவி - என்னும் சொல் இப்பாடலில் தீவகம்
உவமை - மேலே காண்க

மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - (உவமை, உருவகம்) என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 112 | நூல் பக்கம் 87
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment