ஒரே பாடலில் உருவக அணியும் தீவக அணியும் வரின் அது உருவக தீவகம்
பாடல் - எடுத்துக்காட்டு
கானல் கயலாம் வயலில் கமலமாம்ஏனல் கருவிளையாம் இன் புறவில் - மானாம்கடத்து மேல் வேடர் கடும் சரமா நீங்கிக்கடத்துமேல் மெல் இயலாள் கண்.
பாடல் - செய்தி
மெல் இயலாள் கண் - நெய்தல் நிலத்தில் கயல் மீன்மெல் இயலாள் கண் - மருத நிலத்தில் தாமரைமெல் இயலாள் கண் - தினை விளையும் குறிஞ்சி நிலத்தில் கருவிள மலர்மெல் இயலாள் கண் - முல்லை நிலத்தில் மான்மெல் இயலாள் கண் - கடமாகிய பாலை நிலத்தில் வேடன் எய்யும் அம்பு
குறிப்பு
மெல் இயலாள் கண் - என்பது தீவகத் தொடர்உருவகம் மேலே காணலாம்
மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - (உவமை, உருவகம்) என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 111 | நூல் பக்கம் 86
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment