Pages

Sunday, 1 June 2025

சிலேடா தீவகம்

 
சிலேடை அணியும், தீவக அணியும் இணைந்து வரும் பாடல்  சிலேடா தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

மான் மருவி வாள் அரிகள் சேர்ந்து மருண்டு உள்ளம் 
தான் மறுக நீண்ட தகைமையவாம் - கான
வழியும் ஒரு தனி நாம் வைத்து அகலும் மாதர் 
விழியும் தருமால் மெலிவு

பாடல் - செய்தி

  • கான வழி

மான்கள் மருவி வாழும். சிங்கம் சேர்ந்து வரும். கண்டதும் மான்கள் மருளும். அவற்றின் உள்ளம் மறுகும் (பதைக்கும்).  - இது கான வழியில் செல்வோர்க்கு மெலிவைத் தரும். 

  • மாதர் விழி 

மானைப் போல இருக்கும். விழி வெண் படலத்தில் கோடுகள் இருக்கும். மருண்டு பார்க்கும். உள்ளத்தைக் காட்டும். சுழலும். நீண்டிருக்கும். - மாதர் விழியைக் காணும் ஆணுக்கு அது மெலிவைத் தரும்

குறிப்பு

இது வழி, விழி ஆகிய இரண்டுக்கும் சிலேடை
மெலிவு என்னும் சொல் இதில் வரும் தீவகம்

மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 111 | நூல் பக்கம் 86
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment