Pages

Sunday, 1 June 2025

ஒருபொருள் தீவகம்

ஒரே பொருளைக் குறிக்கும் சொற்களுடன் ஒரு சொல் சென்று இயைந்து பொருள் படுமாயின் அது ஒருபொருள் தீவகம் எனப்படும்

பாடல் - எடுத்துக்காட்டு

வியன் ஞாலம் சூழ் திசைகள் எல்லாம் விழுங்கும்
அயல் ஆம் துணை நீத்து அகன்றார் - உயிர் பருகும்
விண் கவரும் வேரிப் பொழில் புதைக்கும் மென் மயில்கள்
கண் கவரும் மீது எழுந்த கார்.  

பாடல் - செய்தி
  • அகன்ற உலகைச் சூழ்ந்திருக்கும் திசைகள் உலகிலுள்ள அனைத்தையும் விழுங்கும். 
  • என் கணவர் என்னை அயல் ஆக்கி, என்னை விட்டுவிட்டு அகன்றதால் தனிமை என் உயிரைப் பருகும். 
  • கவரும் தேன் மணக்கும் பொழில் விண்ணைப் புதைக்கும். 
  • அதில் உள்ள மயில்கள் கண்ணைக் கவரும் 
  • எல்லாம் கண்ணைக் கவரும்படி மேலே எழுந்த கார்மேகம் தோன்றும் காலத்தில் நிகழும் செயல் 
குறிப்பு
  • கார் காலம் - இதில் சொல்லப்பட்ட பொருள்
  • விழுங்கும், கவரும், பருகும், பருகும் - என்பவை, கார் என்னும் தீவகம் தழுவிய செய்திகள்

மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 111 | நூல் பக்கம் 86
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment