Pages

Sunday, 1 June 2025

விருத்த தீவகம்

விருத்தம் என்னும் அணியுடன் தீவக அணி சேர்ந்து வரின் விருத்த தீவகம்.
விருத்தம் = வேறுபாடு

பாடல் - எடுத்துக்காட்டு

வரி வண்டு நாணா மது மலர் அம்பாப்
பொரு வெம் சிலைக்குப் பொலியும் - பிரிவின்
விளர்க்கும் நிறம் உடையார் தம் மேல் மெலிவும்
வளர்க்கும் மலையா நிலம்

பாடல் - செய்தி

தென்றல் காமன் வில்லில் வண்டை நாணாகவும்
தென்றல் காமன் வில்லில்  மலரை அம்பாகவும் 
கொண்டு பொலியும் 
பிரிவில் பசலை நிறம் பாய்ச்சி மகளிர் மேனியில் மெலியும்

குறிப்பு

பொலிவும், மெலிவும் வளர்க்கும் என்பவை விருத்தம்
மலையாநிலம் = தென்றல் - தீவகம் 

மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 110 | நூல் பக்கம் 85
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment