Pages

Saturday, 31 May 2025

மாலாதீவகம்

தீவகச் சொல்லுக்குக் கூறப்படும் பொருள்களை மாலையாகக் கோப்பது மாலைத் தீவகம் 

பாடல் - எடுத்துக்காட்டு

மனைக்கு விளக்கம் மடவார் மடவார்
தமக்குத் நகைசால் புநல்வர் - மனக்கு இனிய
காதல் புதல்வர்க்கும் கல்வியே கல்விக்கும்
ஓதல் புகழ்சால் உணர்வு 

பாடல் - செய்தி

மனைக்கு விளக்கம் மகளிர்
அந்த மகளிர்க்கு விளக்கம் நல்ல பிள்ளை.
அந்தப் பிள்ளைக்கு விளக்கம் கல்வி
அந்தக் கல்விக்கு விளக்கம் உணர்ந்து படித்தல்

குறிப்பு

விளக்கம் என்னும் சொல் - தீவகம் 
மனை - மனைவி - புதல்வர் - கல்வி 
ஆகியவை மாலையாகக் கோக்கப்பட்டுள்ளன 

மாலை, விருத்தம், ஒருபொருள், சிலேடை - என்னும் அணிகளுடன் தீவக அணி வரும்.
தண்டியலங்காரம் PDF பக்கம் 110 | நூல் பக்கம் 85
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment