பாடலின் கடைசியில் நிற்கும் ஒரு பொருட்பெயர் பிறவற்றோடும் சேர்ந்து பொருள் தருமாறு அமைவது கடைநிலைப் பொருள் தீவகம்
பாடல் - எடுத்துக்காட்டு
புறத்தன ஊரன நீரன மாவின்திறத்தன கொற்சேரியவே - அறத்தின்மகனை முறை செய்தான் மாவஞ்சியாட்டிமுகனை முறை செய்த கண்
பாடல் - செய்தி
அறநெறியை நிலைநாட்ட மகனைத் தேர்க்காலில் இட்டு ஏற்றிக் கொன்றவன் மனுநீதிச் சோழன். அவன் ஊரில் வஞ்சிக்கொடி போன்ற ஒருத்தி. அவள் பெயர் மாவஞ்சியாட்டி. அவள் முகத்தை முறைப்படுத்திய (ஒழுங்குபடுத்திய, அழகுபடுத்திய) கண்
- கண் காட்டிலிருக்கும் மான் போன்றது
- கண் நாட்டிலிருக்கும் அம்பு போன்றது
- கண் மாவடு போன்றது
- கண் கொல்லன் சேரியில் வடிக்கும் வாள் போன்றது
குறிப்பு
கண் என்பது ஒரு பொருள். இது பாடலின் கடைசியில் நின்று பிறவற்றுக்கும் ஒளி தரும் விளக்காக இருப்பதால் இது கடைநிலைப் பொருள் தீவகம்
தண்டியலங்காரம் PDF பக்கம் 108 | நூல் பக்கம் 83
தமிழ்வளப் பாடல்கள்
பாடலில் அணிகள்
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment