Pages

Saturday, 31 May 2025

கடைநிலைத் தொழில் தீவகம்

பாடலின் கடைசியில் இருக்கும் தொழில்-சொல் பிறவற்றோடும் சேர்ந்து பொருள் தருவது கடைநிலைத் தொழில் தீவகம்

பாடல் - எடுத்துக்காட்டு

துறவு உளவாச் சான்றோர் இளிவரவும் தூய 
பிற உளவா ஊன் துறவா ஊணும் - பறை கறங்கக்
கொண்டான் இருப்பக் கொடுங்குழையாள் தெய்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று 

பாடல் - செய்தி

  • துறவு பூண்டிருக்கும் சான்றோர் இழிவு தரும் செயலைச் செய்வது மதிக்கப்படாது
  • நல்ல உணவு இருக்கும்போது ஊன் உண்பது மதிக்கப்படாது
  • கணவன் இருக்கும்போது மனைவி வேறு தெய்வத்தை வணங்குவது மதிக்கப்படாது

குறிப்பு

இப்பாடலில் "வைக்கல் பாற்று அன்று" (மதிக்கப்படாது) என்பது பாடலின் கடைசியில் வைக்கப்பட்டுள்ள தீவகம். 


தண்டியலங்காரம் PDF பக்கம் 108 | நூல் பக்கம் 83
தமிழ்வளப் பாடல்கள் 
பாடலில் அணிகள் 
அணியிலக்கணம்
மேற்கோள் வெண்பா பதிவு - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment