வெட்சி மறவர் கவர்ந்து செல்லும் ஆனிரைகளை மீட்கும் போர் கரந்தை.
இவர்கள் சூடிக்கொள்ளும் அடையாளப் பூ கரந்தை.
- பகைவர் கவரும் ஆனிரைகளை மீட்டல் கரந்தை
- பகைவர் கவர்ந்த ஆனிரைகளின் உடைமையாளர் ஒன்று திரண்டு மீட்கப் பேசிக்கொள்ளல் கரந்தை அரவம்
- மீட்கச் செல்லுதல் அதரிடைச் செலவு
- ஆனிரைகளை மீட்கப் போரிடுதல்
- போர்ப் புண்ணொடு வருதல்
- படைக்கருவிகளுக்கு அஞ்சாமல் போரிடுதல்
- எதிரியை வெட்டி வீழ்த்துதல்
- போர்க்காய வலியில் மகிழ்தல்
- பகைவன் குடலை வேலில் மாட்டிக்கொண்டு ஆடுதல்
- மாண்டவன் போரிட்டதை யாழ்ப்பாணன் பாராட்டும் கையறுநிலை
- நெடுமொழி கூறி வீரம் பேசல்
- புள் சகுனத்தைப் பொருட்படுத்தாமல் போரிட்டு வெல்லல்
- மறவன் வேந்தனைப் பாராட்டல்
- குடிப்பெருமை கூறல்

No comments:
Post a Comment