நட்பு கொள்ளாத மன்னனின் நாட்டைக் கொள்ளக் கருதிப்
போரிடுவதற்காக
வாடாத வஞ்சி மலரைத் தலையில் சூடுதல்
"வஞ்சித் திணை" ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
செங்கண் மழ விடையின் தண்டிச் சிலை மறவர்
வெங்கண் மகிழ்ந்து விழவு அமர - அம் குழைய
வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தான் எம் கோ
வணங்காரை வணக்கிய வேந்தன் வஞ்சி சூடினான். அது கண்டு வில் மறவர் போரை விரும்பும் கண்களை உடையவராய், மிகைத்து எழுந்து விழாக் கொண்டாடினர்.

No comments:
Post a Comment