முரசும் களிறும் முழங்க
வாள்-படை சினத்துடன் எழுந்தது பற்றிக் கூறுவது
"வஞ்சி அரவம்"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
பௌவம் பணை முழங்கப் பற்றார் மண் பாழாக
வௌவிய வஞ்சி வலம் புனையச் - செவ்வேல்
ஒளிரும் படை நடுவண் ஊழித் தீ அன்ன
களிறும் களித்து அதிரும் கார்
முரசம் கடல் போல முழங்கிற்று. பகைவர் நிலம் பாழ் ஆகும்படி வஞ்சிப் பூவை வெற்றிப் பூவாக (வலம் = வெற்றி) படை சூடிற்று. ஊழித் தீ போன்ற படைக்கு நடுவில் களிறு இடி போல் முழங்கிற்று.
வஞ்சிப்ப்படலம்
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 50
பாடல் - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment