வண்டு மொய்க்கும் பூமாலை அணிந்துள்ள மன்னன் புகழைப்
புலவர்கள் போற்றிப் பாட
அவன் தன் வெண்கொற்றக் குடையை,
புறவீடு என்னும் பாடிவீட்டுக்குக் கொண்டுசெல்வது
"குடைநிலை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
முன்னர் முரசு இரங்க மூரிக் கடல் தானைத்
துன் அரும் துப்பில் தொழுது எழா - மன்னர்
உடைநாள் உலந்தனவால் ஓத நீர் வேலிக்
குடைநாள் இறைவன் கொள.
- முரசு முழங்கிற்று.
- பெரிய கடல் போன்ற படை தன் வலிமையை வெளிப்படுத்திக்கொண்டு அவனைத் தொழுது எழுந்தது.
- மன்னன் தன் வெண்கொற்றக் குடையைப் பாடிவீட்டுக்கு எடுத்துச் சென்றான்.
- அப்போது பகைமன்னரின் வாழ்நாள் உலர்ந்து ஈரம் குறையலாயிற்று.
No comments:
Post a Comment