பகைவரை வெல்வதற்குச் செல்வதற்காக
மன்னன்
கொற்ற-வாளைப் பாடி வீட்டுக்குக் கொண்டு செல்வது
"வாள்நிலை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
அறிந்தவர் ஆய்ந்த நாள் ஆழித்தேர் மன்னன்
எறிந்திலகு ஒள்வாள் இயக்கம் - அறிந்து இகலிப்
பின்பகலே அன்றியும் பேணார் அகநாட்டு
நண்பகலும் கூகை நகும்.
நாள் அறிந்தவர் கணித்த நல்ல நாளில் அடித்துக் கூர்மை ஆக்கப்பட்ட வாளை ஆழித்தேரில் ஏற்றிப் பாடி வீட்டுக்குக் கொண்டுசென்றான். இதனை அறிந்து பகைநாட்டிலுள்ள கூகைகள் தீநிமித்தம் சொல்லும் முறைமையில் நண்பகலிலும், பிற்பகலிலும் குழறின.
No comments:
Post a Comment