பகைவரை வெல்ல உதவும் கொற்றவையைப் (துர்க்கையைப்) போற்றுதல் "கொற்றவை நிலை" என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
அணங்குடை நோலை பொரி புழுக்கல் பிண்டி
நிணம் குடர் நெய்த்தோர் நிறைத்தக் - கணம் புகலக்
கை இரிய மண்டைக் கணம் ஓடிக் காவலர்க்கு
மொய் இரியத் தான் முந்துறும்.
தெய்வத்துக்கு உரிய எள் உருண்டைபொரிவேக வைத்த பயறுபிடித்த மாவுசதைப் பிண்டம்குடர்குருதிநிரைத்து வைத்திருக்கும் மண்டையைக் கையில் ஏந்திக்கொண்டு கூட்டமாகச் சென்று, கொற்றவைக்குப் படையல் செய்து ‘காவலனுக்கு வெற்றி தருக’ என்று குடிமக்கள் வேண்டிக்கொள்வர்.
No comments:
Post a Comment