பழமையும் தறுகண்மையும் கொண்டு
பிறர் அறியுமாறு வாழ்தல்
"குடிநிலை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
பொய் அகல நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கு ஒலி நீர் - கை அகலக்
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு
முன் தோன்றி மூத்த குடி.
மூத்த குடி கல் தோன்றி மண் தோன்றாப் பழங்காலத்தது.கையில் வாளை ஏந்திப் புகழை உண்டாக்குவது.இது நாள்தோறும் புகழை உண்டாக்கும் செயல்களைச் செய்வதில் வியப்பு என்ன இருக்கிறது?புகழை உண்டாக்குதல் அதன் இயல்பு.
No comments:
Post a Comment