Pages

Thursday, 5 June 2025

வேத்தியல் மலிபு 2-13

வாள் மறவர் 
வேந்தன் சிறப்பினைப் பாராட்டுதல் 
"வேத்தியல் மலிபு" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் பாடல்:

அங்கையுள் நெல்லி அதன் பயம் ஆதலால் 
கொங்கு அலர் தாரான் குடை நிழல் கீழ்த் - தங்கி
செயிர் வழங்கும் வாள் அமருள் சென்று அடையார் வேல் வாய்
உயிர் வழங்கும் வாழ்க்கை உறும். 

அரசனுக்காகப் போரில் உயிர் துறத்தல் பெருமிதம் உடையது 
(மறவன் சொல்கிறான்)

  • அரசன் தேன் துளிக்கும் மாலை அணிந்தவன்.
  • அவன் உள்ளங்கையில் இருக்கும் நெல்லிக்கனி போல் பயன் தருபவன். 
  • அவன் ஆட்சிக்குடை நிழலில் வாழ வேண்டும். 
  • வாள்-போர் குற்றம் உடையதுதான். 
  • என்றாலும் அவனுக்காகப் போரிடும்போது பகைவன் வேல் பாய்ந்து உயிரைக் கொடுப்பதில் ஒரு பெருமிதம் இருக்கிறது. 

கரந்தைப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment