Pages

Thursday, 5 June 2025

பிள்ளைப் பெயர்ச்சி 2-12

பறவை சகுனத்தைப் பொருட்படுத்தாமல் சென்று 
போரிட்டு வெற்றி தேடித் தந்த வீரனுக்கு 
மன்னன் சிறப்பு செய்தல் 
"பிள்ளைப் பெயர்ச்சி" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 

இதனைச் சொல்லும் பாடல்:

பிணங்கு அமருள் பிள்ளை பெயர்ப்பப் பெயராது
அணங்கு அமர் செய்து ஆள் எறிதல் நோக்கி - வணங்காச் 
சிலை அளித்த தோளன் சின விடலைக்கு அன்றே 
தலை அளித்தான் தண்ணடையும் தந்து. 

  • பிள்ளை = காரிக்குருவி
  • தண்ணடை = மருத நிலம்
  • வணங்காச் சிலை அளித்த தோளன் - வேந்தன்

காரிக்குருவி சொன்ன சகுனத்தை மீறிப் போருக்குச் சென்று (குருவிச் சகுனத்தைப் பகைவனுக்கு உரியதாக்கி) போரில் வெற்றியைத் தேடித் தந்த சின விடலைக்கு வேந்தன் மருத நில வயல்களை விருதாக வழங்கிச் சிறப்பு செய்தான்.   

கரந்தைப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment