Pages

Thursday, 5 June 2025

நெடுமொழி கூறல் 2-11

மன்னரின் மேம்பட்ட கொற்றக் குடை கொண்ட வேந்தனுக்கு 
வீரன் ஒருவன் 
தன் மேம்பாட்டை எடுத்துரைத்தல் 
"நெடுமொழி கூறல்" 
என்னும் புறப்பொருள் துறை ஆகும். 
இதனைச் சொல்லும் பாடல்:

ஆள் அமர் வெள்ளம் பெருகின் அது விலக்கி 
வாளொடு வைகுவேன் யானாக - நாளும் 
கழி மகிழ் வென்றிக் கழல் வெய்யோய் ஈயப்
பிழி மகிழ் உண்பார் பிறர். 

வெற்றியைக் கண்டு ஒவ்வொரு நாளும் கழியும் வீரக் கழல் அணிந்த வேந்தனே! நான் ஆளோடு ஆள் போரிடும் வெள்ளப் பெருக்கினைத் தடுத்து வாளோடு வந்து நிற்பேன். இது நான் உண்ணும் மகிழ்ச்சிக் கள். பிறர் பழச் சாறு பிழிந்து எடுத்த கள்ளை உண்பர்.

கரந்தைப்படலம் 
மேற்கோள் பாடல்

பாடல் - சொல் பிரிப்பு

No comments:

Post a Comment