வாள் போரில் மாண்டவனைக் கண்டு
போர்க்களத்தில் யாழ் மீட்டிய பாணர்
அவன் எப்படி இறந்தான் என்று மறவர்களுக்குக் கூறுதல்
"கையறுநிலை"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
நாப் புலவர் சொல் மாலை நண்ணார் படை உழக்கி
தாப் புலி ஒப்பத் தலைக்கொண்டான் - பூப் புனையும்
நல் குலத்துள் தோன்றிய நல் இசை யாழ்த் தொல் புலவீர்
கல் கொலோ சோர்ந்தில என் கண்
நாவால் பாடும் சொல் மாலையை ஏற்றிருக்கும் இவன் பகைவர் படையைத் தாவும் புலி போல உழுது அழித்துத் தலைமை நிலை எய்தினான். கொடையாளர் வழங்கும் பொன்னாலாய பூவைப் புனையும் தொன்மையான யாழிசைப் புலவர்களே! அவன் போரிட்டுப் பட்டதைக் கண்ட என் கண் இரக்கம் இல்லாத கல்லாக இருக்குமோ?
கரந்தைப்படலம்
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 47
பாடல் - சொல் பிரிப்பு
No comments:
Post a Comment