பகைவனைக் கொன்று
அவன் குடலை எடுத்து வேலில் மாட்டிக்கொண்டு
துடி முழங்க ஆடுவது
"பிள்ளையாட்டு"
என்னும் புறப்பொருள் துறை ஆகும்.
இதனைச் சொல்லும் பாடல்:
மாட்டிய பிள்ளை மறவர் நிறம் திறந்து
கூட்டிய எஃகம் குடர் மாலை - சூட்டிய பின்
மால் திரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல் திரிய விம்மும் துடி.
பகைவர் உடலின் முன் பக்கத்தைத் திறந்து குடலை எடுத்து எஃகத்துக்கு (வேலுக்கு) மாலை சூட்டி ஆட்டிச் சுழற்றிக்கொண்டு துடி முழக்கத்துடன் மறவன் வீர வெறி மயக்கம் தீரும் வரையில் ஆடுவான்.
இது சிறுபிள்ளைத்தன விளையாட்டு.
கரந்தைப்படலம்
மேற்கோள் பாடல்
புறப்பொருள் வெண்பா மாலை PDF பக்கம் 46
பாடல் - சொல் பிரிப்பு
![]() |
| எஃகம் |

No comments:
Post a Comment